Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

Advertiesment
சைபர் மோசடி

Siva

, வியாழன், 13 நவம்பர் 2025 (14:53 IST)
ராஜஸ்தான் காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு, ஒரு புதிய வகை மோசடி குறித்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் மோசடி செய்பவர்கள் போலீஸ் அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, நவம்பர் 10 டெல்லி கார் குண்டுவெடிப்பு போன்ற தீவிரமான குற்ற சம்பவங்களைச் சாக்காக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டுகின்றனர்.
 
மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் மொபைல் அல்லது ஆதார் விவரங்கள் இந்த சம்பவத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறி அச்சுறுத்துகின்றனர். பின்னர், சரிபார்ப்பு என்ற பெயரில் வீடியோ காலில் தனிப்பட்ட, வங்கி, ஆதார் மற்றும் யூ.பி.ஐ. விவரங்களை பறிக்க முயல்வதாக சைபர் குற்றப் பிரிவு டி.ஐ.ஜி. விகாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
 
காவல்துறையின் அறிவுரைகள்:
 
அமைதியாக இருக்கவும், தனிப்பட்ட விவரங்களைப் பகிரக் கூடாது.
 
சந்தேக இணைப்புகளை கிளிக் செய்யக் கூடாது.
 
மோசடி குறித்து உடனடி உதவிக்கு 112 அல்லது சைபர் உதவி எண் 9256001930 அல்லது 1930 (தேசிய சைபர் ஹெல்ப்லைன்) ஆகியவற்றைத் தொடர்புகொள்ளவும்.
 
நிதி மோசடிக்கு உள்ளானால் cybercrime.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கவும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!