காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Siva
புதன், 5 நவம்பர் 2025 (16:57 IST)
மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் மற்றும் உணவு பொருட்களின் அதிக விலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விலைகளை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் திரையரங்குகள் விரைவில் காலியாகிவிடும் என்றும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு கருத்து தெரிவித்தது.
 
கர்நாடக உயர் நீதிமன்றம் டிக்கெட் விலையை ரூ.200 என வரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தபோது இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
 
விசாரணையின்போது, "ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, காபிக்கு ரூ.700 வசூலிக்கிறீர்கள்" என்று நீதிபதி நாத் கேள்வி எழுப்பினார். இதற்கு மல்டிபிளெக்ஸ் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "தாஜ் ஹோட்டல் விலையை நிர்ணயிக்க முடியுமா?" என்று கேட்டார்.
 
பதிலளித்த நீதிபதி, "சினிமா துறை தேய்ந்து வருகிறது. மக்கள் வந்து பார்க்க வசதியாக விலையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார். மேலும், இப்போது சாதாரண திரையரங்குகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments