குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

Siva
புதன், 5 நவம்பர் 2025 (16:52 IST)
குருநானக் தேவ் அவர்களின் 556-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்ற 14 இந்தியர்களுக்கு, அட்டாரி-வாகா எல்லையில் நுழைவு மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பாகிஸ்தான் குடிவரவு அதிகாரிகள் இவர்களை திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
டெல்லி மற்றும் லக்னோவை சேர்ந்த இந்த பக்தர்கள், பயணத்திற்காகத் தலா ரூ.13,000 செலுத்தியிருந்த நிலையில், பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த பயணத்திற்காக மத்திய உள்துறை அமைச்சகம் 2,100 பேருக்கு அனுமதி அளித்திருந்தது. சுமார் 1,900 சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர். அகால் தக்த் ஜாதேதர் தலைமையில் ஒரு சீக்கிய பிரதிநிதிகள் குழுவும் குரு பூரப் கொண்டாட்டங்களுக்காகப் பாகிஸ்தான் சென்றுள்ளது.
 
இதற்கிடையே, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய அரசு கர்தார்பூர் வழித்தடத்தை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments