பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் மின் இணைப்பை பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் துண்டித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சின்னசாமி ஸ்டேடியத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்
இந்த ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் KSCA, பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளையும் நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வந்தாலும், கட்டாயமான தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தேவையான பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்படும் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஸ்டேடியத்திற்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கர்நாடக உயர் நீதிமன்றம், தீ பாதுகாப்பு விதிகள் வெளிப்படையாக மீறப்பட்ட நிலையிலும், ஸ்டேடியத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கியதற்காக பெஸ்காம் நிறுவனத்தை கடுமையாக கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.