இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று நடைபெறவிருந்த திருமணம், எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவரது தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் ஸ்மிருதி மந்தனா குடும்பத்துடன் மருத்துவமனைக்கு விரைந்தார். தற்போது அவரது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண தேதி குறித்து தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.