பெங்களூருவின் அனேகல் பகுதியில் உள்ள பிளாஸ்மா மெடினாஸ்டிக்ஸ் ஸ்கேனிங் மையத்தில் பணிபுரிந்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் ஜெயக்குமார் மீது பாலியல் தாக்குதல் புகார் எழுந்துள்ளது. கடுமையான வயிற்று வலியால் ஸ்கேன் செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு பரிசோதனையின்போது மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து, அவர் கேள்வி எழுப்பியபோது கத்தியை காட்டி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
துணிச்சலுடன் செயல்பட்ட அப்பெண், மறுநாள் மையத்துக்கு சென்று மருத்துவரின் அத்துமீறலை ரகசியமாக தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதனை கண்ட அவரது கணவர், மருத்துவரை கேள்வி எழுப்பியபோது அவர் ரவுடிகளை கொண்டு மிரட்ட முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் தலையிட்டு மருத்துவரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெங்களூரு ஊரக காவல்துறையினர், இந்திய வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஜெயக்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.