Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

Advertiesment
பிரியங்கா காந்தி

Mahendran

, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (13:30 IST)
இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரை "நீங்கள் உண்மையிலேயே இந்தியரா?" என்று விமர்சித்ததற்கு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். "உண்மையான இந்தியர் யார் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய வேண்டாம்" என்று பாராளுமன்றத்தில் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய ராணுவத்தை தவறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நேற்று  நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் ராகுல் காந்தியை "நீங்கள் உண்மையிலேயே இந்தியரா?" என்று விமர்சனம் செய்தனர்.
 
உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், இன்று பாராளுமன்றத்தில் பிரியங்கா காந்தி பேசினார். "எனது சகோதரர் ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மிகவும் மதிக்கக்கூடியவர். அவர் ராணுவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசுக்கு கேள்வி எழுப்புவது அவரது உரிமை. சீன விவகாரம் குறித்து அவர் பேசிய கருத்து தவறாகப் பரப்பப்பட்டது."
 
உண்மையான இந்தியர்கள் யார் என்பதை மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் ஆவேசமாக பேசினார்.
 
பிரியங்கா காந்தியின் இந்தக் கருத்துக்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்கு எதிரான காங்கிரஸின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?