அரசு நலத்திட்ட விளம்பரங்களில், பதவியில் இருக்கும் தலைவர்களின் பெயரை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்ததைஎதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகத்தின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அன்று விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.