ஹரியானா தேர்தலில் 'வாக்குத் திருட்டு' நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.
ஒரே நபர் பல அடையாள அட்டைகளுடன் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, வாக்குச்சாவடி முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை?
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதாவது ஒரு பிரேசில் மாடலின் புகைப்படம் பல பெயர்களில் பயன்படுத்தப்பட்டது உட்பட இருந்திருந்தால், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது காங்கிரஸ் கட்சி ஏன் புகார் அளிக்கவில்லை?
ராகுல் காந்தி, 25 லட்சம் போலி வாக்குகள் உருவாக்கப்பட்டதாகவும், ஒரே நபரின் புகைப்படம் 223 வாக்காளர் பெயர்களில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், வாக்குத்திருட்டு நடப்பதை தடுக்கவே சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்து முன்னரே புகார் செய்யாதது ஏன்? என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு இக்குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் என்றும் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.