Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

Advertiesment
பிரியங்கா காந்தி

Siva

, திங்கள், 1 டிசம்பர் 2025 (12:31 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நாடக மேடையாக மாற்றக் கூடாது என்றும், இங்கு நடைமுறைப்படுத்தலே இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் டெல்லி மாசுபாடு ஆகியவை மிகப்பெரிய பிரச்சினைகள். அவற்றை பற்றி விவாதிக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பேசுவது நாடகம் அல்ல" என்று கடுமையாக விமர்சித்தார். ஜனநாயகரீதியாக விவாதிக்க அனுமதிக்க மறுப்பதே நாடகம்" என்றும் அவர் சாடினார்.
 
குளிர்கால கூட்டத்தொடரை நாடக அரங்கேற்றமாக மாற்ற வேண்டாம் என்று மோடி கூறியதுடன், எதிர்க்கட்சிகள் தங்கள் உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கிண்டல் செய்தார்.
 
எஸ்.ஐ.ஆர்., வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலைகள், மற்றும் டெல்லி பயங்கரவாத தாக்குதல் போன்ற பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்