Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

Advertiesment
ஓட்டுநர் உரிமம் மொபைல் எண் இணைத்தல்

Mahendran

, புதன், 5 நவம்பர் 2025 (16:39 IST)
நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர் உரிமதாரர்கள், தங்கள் ஆவணங்களில் தங்கள் மொபைல் எண்ணை உடனடியாக பதிவு செய்வது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பழைய உரிமங்களில் எண் இல்லாதவர்கள் அல்லது பயன்பாட்டில் இல்லாத எண்ணை வைத்திருப்பவர்கள் புதிய எண்ணை சேர்ப்பது அவசியம்.
 
இந்த இணைப்பு இல்லாவிட்டால், சாலை விதிகள் மீறப்படும்போது அனுப்பப்படும் இ-சலான்கள், உரிமத்தை புதுப்பிக்கும் அறிவிப்புகள் மற்றும் அரசின் முக்கிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்காது. ஆர்.சி. புத்தகங்களிலும் மொபைல் எண் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இணைப்பதற்கான சுலபமான வழிமுறை இதோ:
 
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளமான www.parivahan.gov.in செல்லவும்.
 
அதில் உள்ள 'ஓட்டுநர் உரிமம்' சேவையை தேர்ந்தெடுக்கவும்.
 
'அப்டேட்' (Update) பிரிவுக்கு சென்று, 'அப்டேட் மொபைல் நம்பர்' என்பதை கிளிக் செய்யவும்.
 
உங்கள் உரிம எண், பிறந்த தேதி மற்றும் புதிய மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிடவும்.
 
உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபிஐ உள்ளிட்டு, பதிவை உறுதிப்படுத்தினால், உங்கள் புதிய எண் உரிமத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
 
இந்த சுலபமான வழிமுறையை பின்பற்றி, அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு