தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என முன்னாள் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உறுதி எடுத்தது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனின் வலியுறுத்தலின் பேரில் இறுதியாக அவர் செருப்பை அணிந்துக் கொண்டார்.
இப்படியான ஒரு சம்பவம் ஹரியானாவிலும் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் கைதாலை சேர்ந்த ராம்கோபால் காஷ்யப் என்பவர் தீவிரமான பாஜக தொண்டர், நரேந்திர மோடியின் ஆதரவாளர். அவர் நரேந்திர மோடி பிரதமராகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் ஏற்றுள்ளார்
கடந்த 2014ல் நரேந்திர மோடி பிரதமராகிவிட்ட போதிலும் அவர் செருப்பை அணியாமலே இருந்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி ஹரியானா சென்றபோது இதுகுறித்து தெரிய வந்துள்ளது. பின்னர் ராம்கோபால் காஷ்யப்பை நேரில் வரவழைத்து சந்தித்த பிரதமர் மோடி, அவரது உறுதியை பாராட்டியதுடன், புது ஷூ ஒன்றை வாங்கி கொடுத்து அவரை அணிந்துக் கொள்ள சொன்னார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி “யமுனாநகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சபதம் எடுத்திருந்தார் - நான் பிரதமரான பிறகுதான் அவர் காலணிகளை அணிவேன் என்று அவர் என்னைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
ராம்பால் ஜி போன்றவர்களால் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அத்தகைய சபதங்களை எடுக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் - உங்கள் அன்பை நான் மதிக்கிறேன்... தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Edit by Prasanth.K