தமிழ் புத்தாண்டில் ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில், புதிய ஆண்டு எப்படி இருக்கும் என பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அவ்வாறாக நேற்று தமிழ் புத்தாண்டில், ராமேஸ்வர, ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் புது பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் “தங்கம் வெள்ளி விலை மேலும் உயரும், ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். ரியல் எஸ்டேட் பின்னடைவை சந்திக்கும். மின் கட்டணம் உயரும். மக்களிடையே பணப்புழக்கம் குறையும்” என சில அதிர்ச்சிகர பஞ்சாங்க கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் அதேசமயம் “ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றில் உயர்வை காணலாம் என்றும். இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகம் இருக்கும், அதனால் விவசாயமும் செழிப்பாக நடக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பஞ்சாங்கத்திலும், நல்ல மழை, செழிப்பான விவசாயம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வரிவிதிப்பு, போர் சூழல், அரசியல் மாற்றங்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K