Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

Advertiesment
premalatha vijaynakanth

Mahendran

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (18:01 IST)
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க. இணையும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
 
கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. 
 
தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக  பிரதமர் மோடி அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார் 
 
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறினாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி