Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வு மோசடிகளை புகார் செய்ய புதிய இணையதளம்.. தேசிய தேர்வு முகமை..

Advertiesment
நீட் தேர்வு

Siva

, ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (07:51 IST)
நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, இந்த தேர்வு குறித்த புகார்களை அதில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்ற நிலையில், இந்த தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக அதிக முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்திலும் சில வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க புதிய இணையதள பக்கத்தை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. neet.nta.ac.in மற்றும்  nta.ac.in ஆகிய இரண்டு  இணையதளங்களின் வழியாக நீட் தேர்வு மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என்றும், புகார்களை ஆதாரத்துடன் பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ’நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்’ என ஆசை காட்டி மோசடிகளில் ஈடுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மாணவர்கள் உண்மையாகவே படித்து நீட் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருந்தது.. ஆனால்: திருமாவளவன்