இந்தியாவில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டி வரி சீரமைப்பால், மதுபானங்களுக்கு வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கலால் வரி சேர்க்கப்படும்போது மதுபானங்களின் விலை பெருமளவில் அதிகரிக்கும்.
அதேபோல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கும் 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவற்றின் விலை கணிசமாக உயரும். இந்த வரி உயர்வு, அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப் பொருட்கள் என கருதப்படும் குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவற்றின் விலையும் முன்னைவிட கடுமையாக உயரும்.
சர்க்கரை மற்றும் சோடா கலந்த பானங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குளிர்பானங்களின் விலை அதிகரிக்கும்.