Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

Advertiesment
சேகர்பாபு

Siva

, செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (16:17 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக, அங்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ’சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் 30% பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். இதற்கு பதிலாக, பழனியில் இடம் அளித்தால் தருவதாக கேரள அரசு கூறியது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது’.
 
இதுதவிர, சபரிமலை விழா காலங்களில் தமிழக பக்தர்களுக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சேகர்பாபு கூறினார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி