பாகிஸ்தானை சேர்ந்தவர்களை டிவி விவாதத்திற்கு அழைக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவை பற்றி அவதூறாக பல செய்திகளை பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் மற்றும் டிவி விவாதத்தில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் பரப்பி வருவதாக கூறப்படுவதை அடுத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு இந்திய செய்தி ஒளிபரப்பாளர்களுக்கான தேசிய சங்கம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் உள்ள டிவி சேனல்களில் பாகிஸ்தானை சேர்ந்த பேச்சாளர்கள், வல்லுனர்கள், விமர்சகர்கள் ஆகியவர்களை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை திட்டமிட்டு பிரச்சாரம் செய்யும் வேலையை பாகிஸ்தானை சேர்ந்த சில பேச்சாளர்கள் செய்து வருகின்றனர் என்றும், எனவே விவாதங்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பேச்சாளர்களை அழைக்க வேண்டாம் என்றும் இதனை அனைத்து செய்தி சேனல்களும், விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் டிவி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.