Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அரசியல் பிரபலத்திற்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்...!

Advertiesment
dawood ibrahim

Mahendran

, செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:56 IST)
முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவருமான  சித்திக்கிற்கு, தாவூத் இப்ராஹிம் கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி,  சித்திக்கின் அலுவலகம் அருகே மூவர் துப்பாக்கியுடன் தாக்கி, பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றனர். இந்த கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட நிலையில், மும்பை போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர்.
 
இந்தக் கொலைத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில்  சித்திக்கையும் குறிவைத்து இருந்ததாக கைதானோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி, தாவூத் இப்ராஹிம்டம் இருந்து சித்திக்கிற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
 
அதில், “பாபா சித்திக் கொலையில் பிஷ்னோய் குழுவை பொய்யாகத் தொடர்புபடுத்தியதால் வருத்தம். உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ரூ.10 கோடி வழங்குங்கள். போலீசில் புகார் அளிக்க வேண்டாம். இல்லையேல் உங்களையும் கொலை செய்யலாம்” எனவும், “நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மீண்டும் நினைவூட்டல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து,  சித்திக் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 உலக அளவில் குற்றவாளிகளின் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸ் தேதி தாண்டியும் எந்த அப்டேட்டும் இல்லை! ..என்ன ஆச்சு அனுஷ்காவின் ‘காட்டி’ படத்துக்கு?