சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது என ராபர்ட் வதேரா பேசிய பேச்சுக்கு பாஜக மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து ராபர்ட் வதேரா கூறியபோது, இந்துக்களால் நமக்கு தொந்தரவு என்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர் என்றும், அதனால் தான் அடையாள அட்டையை பார்த்து இந்துக்களை மட்டும் குறி வைத்துக் கொன்றுள்ளனர் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் பலவீனம் அடைந்து வருவதாக நினைக்கின்றனர் என்றும், அதனால் தான் பிரதமருக்கே செய்தி சொல்லியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா பயங்கரவாத செயலுக்கு வெட்கமே இல்லாமல் ஆதரவு அளித்துள்ளார். பயங்கரவாத செயலை கண்டிக்காமல், இந்தியா மீது அவர் பழி போடுகிறார். சோனியாவின் குடும்பம் எப்போதும் முஸ்லிம்களையே பார்க்கிறது. காங்கிரஸின் இந்த மனநிலை தான் நாட்டில் வெறுப்புணர்வை விதைத்துள்ளது.
சனாதன தர்மத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளிக்கும் காங்கிரஸின் நிலை தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை தூண்டி விடுபவர்களும் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.