இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற இன்றுடன் கேடு முடிவடைவதை அடுத்து, அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல் கமல் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை அடுத்து, மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் பெற்ற இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற, மத்திய அரசு விடுத்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதனால், அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது விசா ரத்து செய்யப்பட்டது எதிர்த்து பாக்கியசாம்பின் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பாகிஸ்தானியர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.