மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்த 21 வயது மாடல் அழகி குஷி அஹிர்வார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது காதலன் காசிம் அகமது மீது குடும்பத்தினர் கொலை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
உஜ்ஜைனில் இருந்து போபாலுக்கு பேருந்தில் பயணித்தபோது, சுங்கச்சாவடி அருகே குஷி அசைவின்றி போனதாகவும், தான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாகவும் காசிம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், குஷியின் உடல் முழுவதும் கழுத்து, தோள், முகத்தில் காயங்கள் இருந்ததாகவும், காசிம் தாக்கியதாலேயே தன் சகோதரி இறந்ததாகவும் குஷியின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.
காசிம் தற்போது போலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். மருத்துவர்கள் குழு நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலிஸார் காத்திருக்கின்றனர்.
'Diamond Girl' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமான குஷி, மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்.