அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது புளோரிடாவில் உள்ள பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச்சூடு சதியை FBI அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
கடந்த 2024 ஜூலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரத்தின்போது டிரம்ப் சுடப்பட்டு காதில் காயமடைந்த நிலையில், இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கோல்ஃப் மைதானத்தில் அவரை சுட முயன்ற ரியான் வெஸ்லே என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
சமீபத்திய சம்பவமாக, அதிபர் டிரம்ப் பாம் பீச்சிற்கு வருவதற்கு சற்று முன்பு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் இடத்தை நோக்கி, தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை ரகசிய சேவை பிரிவினர் கண்டுபிடித்தனர். இது குறித்து FBI இயக்குநர் காஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் பிடிபடாத நிலையில், இந்த சதி குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், டிரம்ப் வழக்கத்திற்கு மாறாக குறைவான படிக்கட்டுகளை பயன்படுத்தி விமானத்தில் ஏறியதாக தெரிகிறது. அவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.