Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

Advertiesment
லக்னோ

Siva

, ஞாயிறு, 6 ஜூலை 2025 (13:18 IST)
லக்னோவில் ஒரு பால்காரர் தனது கேனில் இருந்த பாலில் எச்சில் துப்பி விநியோகம் செய்த சிசிடிவி காட்சி வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கோம்திநகர் என்ற பகுதியில் முகமது ஷெரீப் என்பவர் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு பால் விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், பால் கேனை எடுத்து செல்லும்போது, அதில் எச்சில் துப்பி, அதன்பிறகு அதை மூடி, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விநியோகம் செய்த சிசிடிவி காட்சி வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உடனடியாக காவல்துறையினர் சிசிடிவி வீடியோ ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் பாலைத்தான் பல வீடுகளில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், குறிப்பாக இந்த பால் தான் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த சம்பவம் குறித்து பால்காரரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், இதேபோல் வேறு இடங்களிலும் அவர் இதுபோன்ற செயல்களை செய்துள்ளாரா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அருவருக்கத்தக்க செயலை செய்த அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!