கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வாய்பிளக்கவைத்தார். இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் செய்ததுதான் மகா சொதப்பல். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதன் காரணமாக லக்னோ அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப் செல்ல ஏதேனும் மாயாஜாலம் நடக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் பண்ட் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் “ரிஷப் பண்ட் எப்போதும் கவலையில்லாமல் சிரித்து மகிழ்ச்சியாகக் கிரிக்கெட் விளையாடக் கூடியவர். ஆனால் இந்த சீசனில் அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. அது கேப்டன் பொறுப்பாலோ அல்லது அதிக சம்பளம் கொடுத்து வாங்கப்பட்டதாலோ வந்த அழுத்தமாக இருக்கலாம். இந்த சீசனில் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது” எனக் கூறியுள்ளார்.