Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

Advertiesment
IPL 2025

Prasanth Karthick

, செவ்வாய், 20 மே 2025 (08:36 IST)

ஐபிஎல் போட்டிகளில் நேற்று நடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

 

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ப்ளே ஆப்க்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுவிட்டன. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் தகுதியில் உள்ள நிலையில் நான்காவது அணியாக தகுதி பெற லக்னோ, மும்பை, டெல்லி அணிகள் போராடி வருகின்றன.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணிகள் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதிக் கொண்டன. இதில் லக்னோ அணியை சன்ரைசர்ஸ் 206 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆப் செல்ல முடியாது, என்றாலும் இந்த வெற்றியின் மூலம் லக்னோவையும் ப்ளே ஆப் செல்ல முடியாதபடி செய்துவிட்டது. இதற்கு முன்பு இதே இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது சன்ரைசர்ஸ் வைத்த 190 என்ற இலக்கை வெறும் 16 ஓவர்களில் லக்னோ சேஸ் செய்து படைத்த சாதனைக்கு பழிவாங்கும் விதமாக லக்னோவின் ப்ளே ஆப் கனவை தகர்த்துள்ளது சன்ரைசர்ஸ்.

 

ப்ளே ஆப்க்கு போராடும் அணிகளுக்கும், ப்ளே ஆப்க்கு செல்லவே முடியாத அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகள் இனி சுவாரஸ்யத்தை அளிப்பதாக அமையப் போகிறது. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!