அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, மாநில ஆளுநர் மற்றும் அட்டர்னி ஜெனரல் போன்ற பதவிகளுக்கு நடைபெற்ற மாகாண தேர்தல்களில் அவரது கட்சியான குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது டிரம்ப் அரசின் மீதான மக்களின் கருத்தை கணிக்கும் தேர்தலாக கருதப்படுகிறது.
தேர்தல் முடிவின் முழு விவரங்கள்:
விர்ஜினியா: ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்பான்பெர்கர், குடியரசு கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். அட்டர்னி ஜெனரல் பதவியிலும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கசாலா ஹாஸ்மி வென்றுள்ளார்.
நியூஜெர்சி: ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மிக்கி செரில் வெற்றி பெற்றார்.
நியூயார்க் மேயர்: மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானி டிரம்ப் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.
மாசாசுசெட்ஸ்: இங்கு நடைபெற்ற நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மிசேல் வூ வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.