மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் சக்தி Gen Z எனப்படும் இளைஞர்களிடம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரியாணா தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம் 'வாக்குத் திருட்டு' நடந்ததாக குற்றம்சாட்டி, 'எச் பைல்ஸ்' ஆவணங்களை ராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.
"இந்த 'வாக்குத் திருட்டை Gen Z இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்கள் எதிர்காலத்தை பற்றியது; உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் இளைஞர்களுக்கு உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் உள்ளது" என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
போலி வாக்காளர்களை நீக்குவதற்கான செயலியை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்றும், நியாயமான தேர்தலை நடத்த ஆணையம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.