உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி, வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பயணத்தின்போது, அவர் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு 75 ஆவது பிறந்தநாள் என்ற நிலையில் ஜெர்சி ஒன்றை அவருக்கு பிறந்தநாள் பரிசாக மெஸ்ஸி அனுப்பியுள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
38 வயதான மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, அவரது தலைமையில் அர்ஜென்டினா அணி, கடந்த 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று, ஒரு நீண்ட நாள் கனவை நிறைவேற்றியது.