Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

Advertiesment
Justice For Mihir

Prasanth Karthick

, புதன், 5 பிப்ரவரி 2025 (13:13 IST)

கேரளாவில் பள்ளி சிறுவனை நிறத்தை சொல்லி கிண்டல் செய்ததுடன், கழிவறையை நக்க சொல்லி துன்புறுத்தியதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரிபுனிதரா பகுதியில் வசித்து வருபவர் ராஜ்னா. இவரது 15 வயது மகன் மிஹிர். மிஹிர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், மிஹிர் கருப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி அந்த பள்ளி மாணவர்கள் பலர் அவனை கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மிஹிரை அதிகமாக துன்புறுத்திய அவர்கள் கழிவறையை நாக்கால் நக்கும்படி துன்புறுத்தியுள்ளதாக மிஹிரின் தாய் கூறியுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த மிஹிர் தனது வீடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து மிஹிரின் தாய் ராஜ்னா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

 

தனது மகன் மிஹிர் இறந்த செய்தி கேட்டபோதும் கூட அந்த சிறுவர்கள் தங்களது வாட்ஸப் குழுவில் “அந்த க$&# இறந்துவிட்டானாம்” என பேசி சிரித்துக் கொண்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். தனது மகன் சாக காரணமாக இருந்த மாணவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர் தனது இன்ஸ்டா கணக்கு மூலமாக Justice For Mihir என்ற பக்கத்தையும் தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த சம்பவம் ஜனவரியில் நடந்த நிலையில், சமீபத்தில்தான் மாணவர்களின் வாட்ஸப் சாட் விவரங்கள் பற்றி தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தற்போது நடிகர் ப்ரித்விராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் பதிவிட தொடங்கியுள்ளதால் இந்த விவகாரம் வேகமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு: சிவசேனா அதிர்ச்சி தகவல்..!