அங்கன்வாடியில் பிரியாணி சிக்கன் தர வேண்டும் என்று குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், கேரள அரசு அதனை பரிசீலனையில் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் ஒரு குழந்தை, தினசரி தங்களுக்கு உப்புமா தான் சாப்பாடு தரப்படுவதாகவும், அதற்கு பதிலாக பொரித்த கோழி, பிரியாணி தருமாறு கோரிக்கை விடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது.
 
									
										
			        							
								
																	அந்த குழந்தை, உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி மற்றும் பொறித்த கோழி வேண்டும் என்று அப்பாவித்தனமாக தனது தாயிடம் கேட்டுள்ளார். இந்த வீடியோவை அந்த குழந்தையின் தாய் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
 
									
											
									
			        							
								
																	இந்த வீடியோ வைரலான நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தையின் கோரிக்கையை பரிசீலனை செய்வோம் என்றும், குழந்தையின் அப்பாவித்தனமான கோரிக்கை அடிப்படையில் விரைவில் மெனு திருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும், அதன் மூலம் பால் முட்டை வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.