இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 190 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தப்பட்டனர். இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாடிய நிலையில் வரும் 30 ஆம் தேதி டெல்லி அணிக்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் விளையாடவுள்ளார் கோலி.
அதற்கு முன்பாக இப்போது மும்பையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் கோலியுடன் இருந்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.