Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

Advertiesment
அமைச்சர் மனோ தங்கராஜ்

Siva

, வியாழன், 20 நவம்பர் 2025 (08:36 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அவர்கள் நேற்று நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி முன் பேசிய பேச்சை குறிப்பிட்டு, தமிழக பால்வளம் மற்றும் பால் உற்பத்தி வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரை புகழ்ந்துள்ளார்.
 
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய், மனிதநேய ஒற்றுமை குறித்து பேசியதை அமைச்சர் மனோ தங்கராஜ் வெகுவாக பாராட்டினார்.
 
இது குறித்து பேசிய அமைச்சர், "ஐஸ்வர்யா ராய்க்கு பாராட்டுகள்... உலகில் ஒரே ஒரு சாதிதான் உள்ளது, அதுதான் மனித சாதி என்று அவர் உரத்த குரலில் தைரியமாக பிரகடனம் செய்தார்," என்று புகழாரம் சூட்டினார்.
 
அவர் இவ்வாறு பேசியதோடு மட்டுமின்றி, ஐஸ்வர்யா ராயின் இந்த முற்போக்கு கருத்தை, பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு ஒரு தேர்தல் வேட்பாளரின் சாதி குறித்து பேசியதாக கூறப்படும் கருத்துடனும் ஒப்பிட்டும் அவர் பேசினார்.
 
ஐஸ்வர்யா ராய் தனது உரையில், "ஒரே ஒரு மதம் தான் உள்ளது, அது அன்பின் மதம்" என்றும் குறிப்பிட்டிருந்தார். எனினும், அமைச்சர் மனோ தங்கராஜ் ஐஸ்வர்யா ராயின் இந்ப் பேச்சிற்கு அரசியல் ரீதியான விளக்கம் அளிப்பதாகவே இச்செய்தி பார்க்கப்படுகிறது.
 
ஒற்றுமையை பற்றி ஐஸ்வர்யா ராய் பேசிய கருத்து, அரசியல் தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!