மும்பை பங்குச்சந்தையில் இன்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியதன் காரணமாக இந்திய குறியீடுகள் வீழ்ச்சியடைந்தன. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் குறியீடு 519.34 புள்ளிகள் சரிந்து 83,459.15 என்ற நிலையில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி, 165.70 புள்ளிகள் குறைந்து 25,597.65-க்குக் கீழே நிலைபெற்றது.
தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் சாதனங்களை தவிர, மற்ற துறைகள் அனைத்திலும் விற்பனை அதிகரித்ததால் நிஃப்டி 25,600 புள்ளிகளுக்கு கீழே சென்றது. பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு 0.2% சரிந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.7% சரிந்தது.
சென்செக்ஸில் பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. அதேசமயம், டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்த நிலையில் குரு நானக் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 5-ஆம் தேதி பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.