Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

Advertiesment
இந்தியா-இங்கிலாந்து

Mahendran

, வியாழன், 24 ஜூலை 2025 (18:16 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்னென்ன லாபம் என்பதை பார்ப்போம்.
 
 
1. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு: தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், தொழில்முறை சேவைகள், மேலாண்மை ஆலோசனை, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் தொழில் உருவாக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த ஒப்பந்தம் பலன் தரும். மேலும், இளம் தொழில்முனைவோர் மற்றும் இந்திய பட்டதாரிகள் இங்கிலாந்தில் தொழில் தொடங்கவும் இது உதவும்.
 
2. மலிவான பொருட்கள்: இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்கள், விண்வெளி பாகங்கள் போன்றவற்றை இந்திய தொழில்கள் மற்றும் மக்கள் இப்போது மிக மலிவான விலையில் பெற முடியும்.
 
3. சராசரி வரிகள் குறைப்பு: பிரிட்டிஷ் பொருட்களான குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், ஆட்டு இறைச்சி, சால்மன் மீன் மற்றும் கார்கள் போன்றவற்றுக்கான சராசரி வரிகள் 15 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும்.
 
4. மின்சார வாகனங்கள்: மின்சார வாகனங்களுக்கான வரி 110 சதவீதத்திலிருந்து  10 சதவீதமாக குறைய வாய்ப்பு.
 
5. விஸ்கி இறக்குமதி:  பிரிட்டிஷ் நிறுவனங்கள் விஸ்கி மற்றும் பிற பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது எளிதாகும். விஸ்கிக்கான இறக்குமதி வரி உடனடியாக 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைந்து, 10 ஆண்டுகளில் 40 சதவீதமாக குறையும்.
 
6. இங்கிலாந்தில் வசிப்பது எளிது:  இங்கிலாந்தில் இந்தியர்கள் வசிப்பதையும் எளிதாக்குகிறது. நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டோர் இங்கிலாந்தில் 36 சேவை துறைகளில் எந்த பொருளாதார தேவைகள் சோதனை'யும் இல்லாமல் அணுக முடியும்.
 
7. தொழில் வல்லுநர்கள்: இந்தியத் தொழில் வல்லுநர்கள் இப்போது இங்கிலாந்தில் அலுவலகம் இல்லாமலேயே 35 துறைகளில் 2 ஆண்டுகள் பணியாற்ற முடியும். இந்த நடவடிக்கை ஆண்டுக்கு 60,000 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பலன் தரும்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் இருந்து ஆள் எடுக்க வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்: டிரம்ப்