Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

Advertiesment
டிரினிடாட் மற்றும் டொபாகோ

Siva

, ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:29 IST)
உலகளவில் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பமான UPI பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது, கரீபியன் நாடுகளான டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடுகளிலும் UPI அறிமுகமாகியுள்ளது.
 
டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கம்லா பிரசாத்-பிஸ்ஸேசர் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அப்போது, கரீபியன் நாடுகளில் UPI கட்டண முறையை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக டிரினிடாட் மற்றும் டொபாகோ உருவெடுத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
 
டிரினிடாட் மற்றும் டொபாகோ இப்போது உலகளாவிய UPI கட்டண அமைப்பில் இணைந்ததன் மூலம், இந்தியா உருவாக்கிய இந்த சிறப்பான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2021ல் பூட்டான், 2022ல் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், 2023ல் பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர், 2024ல் மொரீஷியஸ் மற்றும் இலங்கையில் UPI பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது 2025ல் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவை இணைந்துள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!