பிஹார் சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா - நேபாளம் இடையேயான சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையேயான வாகன போக்குவரத்து 72 மணிநேரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலைகளை தவிர, இரு நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து நாளை மாலை 6 மணிவரை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கும்.
மூடப்பட்ட பகுதிகள்: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் சரலாஹி, மஹோத்தாரி, மற்றும் ரௌதத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எல்லை நுழைவுகள் மூடப்பட்டுள்ளன.
இரு நாட்டு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்பட உள்ளன.