பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று முந்தியடித்துக்கொண்டு, இணையதளத்தில் நுழைந்ததால், வருமான வரித்துறை இணையதளம் முடங்கியது.
ஆதார் எண் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் வங்கி, சான்றிதழ், போன் சிம்கார்டு,காஸ் இணைப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு ஆதர் எண்ணுடன் இணைக்க வேண்டுமென மத்திய அரசு கூறியது.
இந்நிலையில் சமீபத்தில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் எனவும் இல்லாவிட்டால் யார் இணைக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு ரூ.10000 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று முந்தியடித்துக்கொண்டு, இணையதளத்தில் நுழைந்ததால், வருமான வரித்துறை இணையதளம் முடங்கியது இந்தக் காலக்கெடுவை நீட்டுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.