Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவுடன் கூட்டணி அமைக்கும் இரான்: அமெரிக்காவை சமாளிக்கவா?

சீனாவுடன் கூட்டணி அமைக்கும் இரான்: அமெரிக்காவை சமாளிக்கவா?
, புதன், 31 மார்ச் 2021 (17:10 IST)
சீனா மற்றும் இரான் சென்ற வார இறுதியில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி என இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று  ஊகிக்கப்படுகிறது.
 
இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும்  சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.
 
கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக்  காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.)
 
இரான் சீனாவை காட்டிலும் சிறிய நாடாக இருப்பினும் அதிக இயற்கை வளங்களை கொண்டது. மேலும் இரான் வீரியமான ஒரு வெளியுறவு கொள்கையை  கொண்ட நாடு.
 
இந்த புதிய ஒப்பந்தம் இரானின் அமெரிக்காவுடனான மோதலுக்கு ஈடுகட்டுவதாக இருக்கும்.
 
அமெரிக்கா, இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் கூட்டு செயல் திட்டத்தில் மீண்டும் அமெரிக்கா இணைய விரும்புவதாக இரான் மற்றும் பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஆகிய இரண்டுமே தெரிவித்துள்ளன.
 
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுவதாக தெரிவித்தார். இரான் அணு ஆயுதத்தை பெறுவதை நிறுத்தவதைக் காட்டிலும், அணு ஆயுதங்களை பெறும் முறையை அது மேலும் எளிதாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
ஆனால் இரானோ அமெரிக்காவோ இரு நாடுகளில் யார் முதலில் ஒப்பந்தம் குறித்த முயற்சியை முன்னெடுப்பது என்று யோசித்து கொண்டிருக்கின்றன.
 
தற்போது சீனாவுடன் இரான் கேந்திர முக்கியத்துவம் கொண்ட ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகப்படியான எண்ணெய் விற்பனையை இரான்  எதிர்நோக்குகிறது. அமெரிக்காவின் தடையால் இரானின் பொருளாதாரம் பாதிப்படைந்திருந்த நிலையில், எண்ணெய் விற்பனை அவசியமான ஒன்றாக உள்ளது.
 
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான இரானின் செல்வாக்கை அதிகரிக்கும்.
 
அமெரிக்க அதிபர் பைடன் தனது முந்தைய அதிபர்களை போலவே மத்திய கிழக்கிலிருந்து லாபகரமான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்த முயற்சித்தார்.
 
ஆனால் நடைமுறையில், அது அவ்வளவு சாத்தியப்படுவதாக இல்லை. ஏனென்றால் அமெரிக்காவிற்கு முக்கியமான பல விஷயங்கள் மத்திய கிழக்கில் உள்ளன. அதில் இரானும் அதன் அணு ஆயுத திட்டங்களும் ஒன்று.
 
எனவே மத்திய கிழக்குடனான உறவில் அமெரிக்கா முன்னுக்கு செல்லவோ பின்னுக்கு செல்லவோ விரும்பவில்லை.
 
அது தனது உறவை வலுப்படுத்த யோசிக்கும் தருணம் அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு சந்தர்ப்பமாக அமைந்துவிடுகிறது.
 
சிரியா விஷயத்தில் தலையிடுவதன் மூலம் ரஷ்யா தனது பழைய இடத்தை புதுப்பிக்க ஒரு வாய்ப்பை கண்டுள்ளது.
 
அமெரிக்கா ஒரு நீண்ட, மீளமுடியாத சரிவில் இருப்பதாக சீனா நம்புகிறது. சீனா தன்னை 21ஆம் ஆண்டு நூற்றாண்டிலும் அதற்கு அடுத்தபடியாக வளரும் அதிகாரமாக தன்னை பார்க்கிறது. எனவே அந்த வளர்ச்சியின் தன்மையை மத்திய கிழக்கால் ஒதுக்கிவிட முடியாது.
 
இரானால் பண ரீதியாக ஆதரவு வழங்கப்படும் குறுகியகால பலன்களை காட்டிலும் சீனாவின் நீண்டகால கனவிற்கு வளைகுடாவில் கேந்திர ஒத்துழைப்பு என்பது மிக முக்கியம்.
 
இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட மத்திய கிழக்கு சென்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இரானோடு மட்டும் தனது பயணத்தை நிறுத்தவில்லை.
 
இஸ்ரேல் - பாலத்தீன உரையாடலுக்கு ஆக்கபூர்மான ஊக்கங்களை அளிப்பதன் மூலமும், இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதன் மூலமும் மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய ஐந்து அம்ச திட்டத்தை அவர் வெளியிட்டதாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமாக  இருக்கும் `சீனா டெய்லி` நாளிதழ் தெரிவித்துள்ளது.
 
இதைத்தான் மேற்கத்திய வெளியுறவு அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தனது கூட்டாளிகள் வரைவுகளை கையெழுத்திடுவதற்கு மேல் வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை.
 
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், செங்கடலில் உள்ள ஜிபோட்டியில் தனது முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தை கட்டமைத்துள்ளது.
 
அது உலகின் மிக பரபரப்பான கப்பல் வழித்தடத்தை மேற்பார்வையிடுகிறது. மேலும் இது அமெரிக்க ராணுவத்தின் ஆப்ரிக்க படைத்தளத்திலிருந்து 10கிமீ தொலைவில்தான் உள்ளது.
 
ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகம் கூட்டு விரிவான ஒப்பந்தத்திற்குள் மீண்டும் வருவதற்கான வழியை தேடிக் கொள்ளும்.
 
உலகின் மிக நிலையற்ற பிராந்தியத்தில் நுழையும் சீனாவின் வேகத்தை அமெரிக்கா அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கர் பண்ணிய மைக்; கடுப்பில் டார்ச் லைட்டை வீசிய கமல்ஹாசன்!