IBM நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற வளர்ச்சி பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. CEO அரவிந்த் கிருஷ்ணாவின் தலைமையில், பாரம்பரிய வணிகங்களிலிருந்து விலகி, அதிவேக வளர்ச்சி பிரிவுகளை நோக்கி IBM திரும்பியுள்ளது.
AI கருவிகள் ஏற்கனவே 200 மனித வளத்துறை ஊழியர்களுக்குச் சமமான பணிகளை கையாள்வதாகக் கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் விற்பனை திறமையாளர்களை நியமிக்க IBM கவனம் செலுத்துகிறது.
அமேசான், மெட்டா போன்ற மற்ற நிறுவனங்களை போலவே, உற்பத்தித்திறன் மற்றும் செலவின குறைப்பிற்காக AI-யைத் தழுவுவதன் ஒரு பகுதியாகவே IBM இன் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.