நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜிஎஸ்டி 2.0 சீரமைப்பு, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளாக விலை மாறாமல் இருந்த ₹5 மற்றும் ₹10 மதிப்பிலான பார்லே-ஜி பிஸ்கெட்டுகளின் விலை குறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக ₹5-க்கு விற்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டின் விலை தற்போது ₹4.45 ஆக குறைந்துள்ளது. ₹1-க்கு விற்கப்பட்ட சாக்லேட்டுகளின் விலை ₹0.88 ஆக குறைந்துள்ளது.
ஏழை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ₹2 ஷாம்பு பாக்கெட்டுகளின் விலை ₹1.77 ஆக குறைந்துள்ளது.
மற்ற பொருட்கள் விலை இதோ:
போர்ன்விடா ₹30 பாக்கெட் - ₹26.69
ஓரியோ பிஸ்கெட் ₹10 பாக்கெட் - ₹8.90
ஜெம்ஸ் மற்றும் 5 ஸ்டார் சாக்லேட் ₹20 பாக்கெட் - ₹17.80
சாதாரண மக்களுக்கு இந்த விலை குறைப்பு நேரடியாக பயனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ரொக்க பரிவர்த்தனைகள் செய்யும் மக்கள், குறைக்கப்பட்ட பைசாக்களை செலுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதனால், இந்த விலை குறைப்புகள் நுகர்வோருக்கு சென்று சேராமல் போகலாம்.