தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றும் நேற்று முன்தினமும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்திருந்தாலும் ஒரே வாரத்தில் ரூ. 2000க்கும் மேல் உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,640
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,600
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 85,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 84,800
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,607
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,563
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 92,856
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 92,504
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 150.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 150,000. 00