சந்தையில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி இணைய பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன் நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவை, இன்று திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்டது. தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் போன்களை கண்டறிவது, சிம் கார்டுகளை பற்றித் தெரிந்துகொள்வது மற்றும் இணைய பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற அம்சங்களுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டது.
இந்த செயலியை கட்டாயமாக முன் நிறுவ வேண்டும் என்ற உத்தரவு, உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இது தனிமனித தனியுரிமையை பாதிக்கும் மற்றும் அரசின் மேற்பார்வையை அதிகரிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களின் அடிப்படையில், அந்த உத்தரவை மத்திய அரசு தற்போது விலக்கி கொண்டுள்ளது.