பாரத் பெட்ரோலியத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி சிவக்குமார் கே., தமது மகள் அக்ஷயா சிவக்குமார் இறந்த பிறகு, பிரேத பரிசோதனை முதல் இறப்பு சான்றிதழ் வரை ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாகப் புகார் அளித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஆம்புலன்ஸ், எஃப்ஐஆர் பதிவு, பிரேத பரிசோதனை அறிக்கை, இறுதிச்சடங்கு இரசீது மற்றும் பிபிஎம்பி மூலம் இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்து நிலைகளிலும் அதிகாரிகள் பணம் கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதில், பெலந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மனிதாபமானமின்றி நடந்துகொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
	 
	"என்னால் பணம் கொடுக்க முடிந்தது; ஏழைகள் என்ன செய்வார்கள்?" என்று அவர் எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெங்களூரு போலீஸ் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, பெலந்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பி.எஸ்.ஐ. மற்றும் ஒரு காவலரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.