Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

Advertiesment
இமாச்சலப் பிரதேசம்

Mahendran

, திங்கள், 28 ஜூலை 2025 (11:17 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் தனது பெற்றோர் மற்றும் பாட்டி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் இழந்த பத்து மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டது. உறவினர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் உடல்கள் கிடைத்தனவா என்பது இதுவரை தெரியாத நிலையில், அனாதையாக விடப்பட்ட அந்தக் குழந்தையை 'மாநிலக் குழந்தை'யாகத் தத்தெடுப்பதாக இமாச்சலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழந்தையின் கல்வி உட்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இமாச்சலப் பிரதேசத்தின் கல்வராய கிராமத்தில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த பத்து மாத குழந்தை மீட்கப்பட்டது. தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியாததால், அவர்களின் உடல்களும் இதுவரை கிடைக்கவில்லை. நிராதரவாக நின்ற அந்த குழந்தைக்கு 'நீதிகா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தச் சூழலில்தான், இமாச்சல பிரதேச முதல்வர், "இந்தக் குழந்தையை வளர்ப்பது, கல்வி அளிப்பது மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அனைத்து மாநிலத்தின் கடமை" என்று அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேச அரசு, 'நீதிகா'வை மாநில குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்து, அதன் எதிர்கால செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்கும் எனத் தெரிவித்துள்ளது. 
 
இந்த மனிதாபிமான அறிவிப்பு, மாநிலத்தில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில், ஒரு குழந்தைக்கான இந்த அரசின் உறுதிமொழி, ஒரு நம்பிக்கை ஒளியாகப் பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!