Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

Advertiesment
Scholarship

Prasanth K

, திங்கள், 28 ஜூலை 2025 (10:45 IST)

பல்வேறு பொருளாதார சூழல்களில் இருந்தும் வந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

 

பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுகள், அதற்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இங்கே வழங்கப்படுகிறது.

 

NMMS - தேசிய வருவாய் மற்றும் திறன் மேம்பாட்டு தேர்வு (8-ம் வகுப்பு)

  • உதவித்தொகை: மாணவருக்கு ஆண்டு ரூ.12,000 (4 ஆண்டுகள்)
     

  • சலுகை: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1.5 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்
     

  • தகுதி: அரசு/நிறுவனங்கள்/உதவி/நகராட்சி பள்ளி மாணவர்கள்

  • பாடத்திட்டம்: கணிதம்/ அறிவியல்/ சமூக அறிவியல் 7ம் வகுப்பு (மூன்று மாதங்கள்) 8ம் வகுப்பு (இரண்டு பருவம் வரை)
     

  • தேர்வின் அமைப்பு:
     

    • மனம் திறன் தேர்வு (MAT - 90 மதிப்பெண்கள்)
       

    • கல்வித் திறன் தேர்வு (SAT - 90 மதிப்பெண்கள்), ஒவ்வொன்றும் 90 நிமிடம்
       

  • தேர்வு கட்டணம்: ரூ.50
     

NTSE - தேசிய திறன் தேடல் தேர்வு (10-ம் வகுப்பு)

  • உதவித்தொகை: மாணவருக்கு ஆண்டு ரூ.1,250 (11,12 வகுப்பு), UG/PG மாணவர்களுக்கு ரூ.2,000

  • தகுதி: 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் 80 சதவீதம். SC/ST மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
     

  • பாடத்திட்டம்: கணிதம், அறிவியல், சமூக அறிவியல்

  • தேர்வு கட்டணம் ரூ.50
     

  • தேர்வு அமைப்பு:
     

    • நிலை 1 (மாநிலம்), நிலை 2 (தேசியம்)
       

    • MAT (100 மதிப்பெண்கள்), SAT (100 மதிப்பெண்கள்)
       

TRUST - தமிழக ஊரக மாணவரர் திறன் தேர்வு (9-ம் வகுப்பு)

  • உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.1,000 (4 ஆண்டுகள்)
     

  • சலுகை: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்

  • பாடத்திட்டம்: கணிதம், அறிவியல், சமூக அறிவியல் (8ம் வகுப்பு முழு புத்தகம், 9ம் வகுப்பு முதல் பருவம் வரை)
     

  • தேர்வு அமைப்பு:
     

    • மனம் திறன் (MAT) – 25 மதிப்பெண்கள்
       

    • கல்வி திறன் (SAT) – கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா 25 மதிப்பெண்கள்
       

  • தேர்வு கட்டணம்: ரூ.10

  •  

TM CMTS - தமிழக முதல்வர் திறன் தேர்வு (11-ம் வகுப்பு)

  • உதவித்தொகை: மாதம் ரூ.1,000 (2 ஆண்டுகள், 10 மாதங்கள் ஆண்டுக்கு) (மொத்தம் 20 மாதங்கள்)
     

  • தகுதி: அரசு/உதவிபெறும்மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும்

  • பாடத்திட்டம்: கணிதம், அறிவியல், சமூக அறிவியல் (9 மற்றும் 10ம் வகுப்பு முழு புத்தகம்)

  • தேர்வு கட்டணம் - 50 ரூ
     

  • தேர்வு அமைப்பு: MAT - 100 மதிப்பெண்கள்

  • தமிழ்நாடு முழுவதும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

  • உதவித்தொகை: மாதத்திற்கு ரூ.1500 (2 வருடங்களுக்கு)
  • பாடத்திட்டம்: 10ம் வகுப்பு தமிழ்
  • தேர்வு கட்டணம் : ரூ.50
  • தேர்வு: 100 மதிப்பெண்கள்
  • தமிழ்நாடு முழுவதும் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

மேற்கண்ட உதவித்தொகை தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகிறது. மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட உதவித்தொகை தேர்வுகளுக்கான அறிவிப்பினை பார்க்கலாம்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமியார் கொடுமையால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை.. மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோ..!