Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே! சொதப்பிய அமைச்சரின் பிளான், மனவுளைச்சலில் மாஜி MLA

Advertiesment
Minister Chakrabani clash

Web Desk

, செவ்வாய், 4 நவம்பர் 2025 (13:59 IST)

அரசியல் சுயலாபத்திற்காக சொந்த கட்சி போட்டியாளர்களை வீக் ஆக்குவது வழக்கமாக அரசியல் நடப்பது தான் ஆனால் மக்களின் வாழ்வியலை அழித்து தனக்கான அதிகாரபலத்தை உருவாக்க அப்படி செய்வது அரசியல் எதிர்காலத்தை காவு வாங்கிவிடும். அப்படியான சம்பவம் தான் பழனி திமுகவில் நடந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை பிரித்து பழனி மாவட்டமாக உருவாக்கி தனக்கான அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள ஆதரவாளர்களுடன் களமிறங்கியுள்ள சக்கரபாணி & கோவுக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய அமைச்சர் சக்கரபாணி திட்டமிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே பழனி மாவட்டத்தை புதிதாக உருவாக்க முயன்றதும் அதை மக்களே முறியடித்ததும் அம்பலமாகியுள்ளது .  

 

“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்தி திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். ​முதல்வர் மு.க.ஸ்​டா​லினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர். அடிக்கடி ஆர்ப்​பாட்​ட​மில்​லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்​கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்தியதாக  உடன்பிறப்​புகள் சொல்கிறார்கள்.

 

கடந்த தேர்தலில் பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்​கப்​படும் என திமுக-வும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, பழநி, மடத்துக்​குளம், உடுமலைப்​பேட்டை, ஒட்டன்​சத்​திரம் தொகுதிகளை உள்ளடக்கி பழநியை தலைநக​ராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி மெனக்​கிடு​வ​தாகச் சொல்கி​றார்கள்.

 

“திண்​டுக்கல் மாவட்ட திமுக-வில் மூத்த அமைச்சரான ஐ.பெரிய​சாமி​யும், அவரது மகன் செந்தில்​கு​மாரும் அசைக்​க​முடியாக சக்தியாக இருக்​கி​றார்கள். ஐபி-யை மீறி அங்கு சக்கர​பாணியால் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை. அதனால், பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்​டத்தை உருவாக்​கினால் மாவட்ட அமைச்சராக தான் மட்டுமே அதிகார பலத்தோடு வலம்வரலாம் என நினைக்கும் சக்கர​பாணி.  2026-ல், தற்போது அதிமுக வசம் உள்ள மடத்துக்​குளம், உடுமலை தொகுதிகளை திமுக-வுக்கு வசமாக்கிக் காட்டு​கிறேன் என்று தலைமையில் சொல்லித்தான் பழநி மாவட்டப் பிரிப்​புக்கு சக்கரபாணி அடிபோட்டதாக சொல்கி​றார்கள்.

 

ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்​குளத்​தை​யும், உடுமலை​யையும் தென்மாவட்ட வாழ்வியல் சாயலைக் கொண்ட பழநி, ஒட்டன்​சத்​திரம் தொகுதி​களையும் உள்ளடக்கி புதிய மாவட்​டத்தை உருவாக்​குவது தான் அந்த பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியது.

 

பழநி மாவட்​டத்தில் திருப்பூர் மாவட்​டத்தின் இரண்டு தொகுதிகள் சேர்க்​கப்​படலாம் என்ற செய்தியை திருப்பூர் மாவட்ட திமுக செயலா​ளர்​களும் அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனும், அமைச்சர் ஐ.பெரியசாமியும்  அவ்வளவாய் விரும்பவில்லை என்கி​றார்கள். தங்களுக்கான ஆளுகை எல்லை குறைந்து போகும் என்பது இவர்களது கவலை.  ஆனால், மடத்துக்​குளம், உடுமலை தொகுதி​களில் உள்ள சக்கர​பாணியின் ஆதரவாளர்கள் எம்எல்ஏ, எம்பி, மாவட்டச் செயலாளர் கனவில் புதிய மாவட்​டத்தை வரவேற்றுக் கொண்டிருக்​கி​றார்கள் அதில் ஒருவர்தான் அவர் தான் ஜேஆர்கே எனும் ஜெயராமகிருஷ்ணன், சக்கரபாணியின் தீவிர விசுவாசியான இவர் கடந்த 2021ல் தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில்   போட்டியிட்ட இவர் 6000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைத்தொடர்ந்து ம.செ. பதவியும் கைவிட்டுச் சென்றது. 

 

கடந்த நான்கரை ஆண்டுகள் பெரிதாக இவருக்கு கட்சியில் முக்கியதுவம் இல்லை மக்கள் மத்தியிலும் பெரிதாக செல்வாக்கு இல்லை. அரசியலில் பியூஸ் போன பல்பாகிவிட்ட இவர் அமைச்சர் சக்கரபாணியின் தயவில் இன்னும் தொகுதியில் நான் தான் இந்த பகுதியின் திமுகவின் முக்கிய முகமாக கட்டிக்கொள்கிறார். இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை பழனியுடன் இணைத்துவிட்டால் சக்கரபாணி புண்ணியத்தில்  மு.பெ.சாமிநாதன், La. பத்மநாபனை மீறி மாவட்ட செயலாளராக ஆகிவிடனும் என்ற முயற்சியில் இருக்கிறாராம். அப்படியே  இந்த முறை எப்படியும் தனது செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்கிவிட மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வந்துள்ளார் ஜேஆர்கே எனும் ஜெயராமகிருஷ்ணன்"

 

ஆக அரசியல் சுயலாபத்திற்காக மக்களின் வாழ்வியலை மாற்றுவது முயன்றது அம்பலமானது.  மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அரசும் இந்த திட்டத்த்தை கைவிட்டது. 

 

 

தனி சாம்ராஜ்யம் பண்ணனும்ன்றது பல வருட கனவு ! நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என அமைச்சரும், எம்.எல்.ஏ கனவில் இருந்த மாஜி எம்எல்ஏவும் மனவுளைச்சலில் இருக்கிறார்களாம்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்று வசனம் பேசாமல், பெண்களை காக்க நடவடிக்கை எடுங்கள்! - முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!