டாஸ்மாக் முறைகேடு வழக்கில், ஆதாரங்கள் இல்லாமல் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததால் சென்னை உயர் நீதிமன்றம் ரூ.30,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி, தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், விக்ரம் ரவீந்திரனின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.இந்த செயலை எதிர்த்து விக்ரம் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், விக்ரம் ரவீந்திரன் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், அமலாக்கத்துறை இந்த இடங்களில் சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு முறை அவகாசம் அளித்தும், பதில் தாக்கல் செய்யாத காரணத்தால் ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.