Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

Advertiesment
அசதுதீன் ஓவைசி

Mahendran

, செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:51 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஓவைசிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. தேஜஸ்வி யாதவ், ஓவைசியை ‘தீவிரவாதி’ என்று கூறியதற்கு பதிலடி கொடுத்த ஓவைசி, "தேஜஸ்வி யாதவ், மோடியின் சோட்டா பாய்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீமான்சல் பகுதி, பீகார் அரசியலில் இரு கட்சிகளுக்கும் முக்கியமான களம் ஆகும். இந்த பிராந்தியத்திலேயே இரு தலைவர்களின் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
 
தேஜஸ்வி யாதவின் ‘தீவிரவாதி’ என்ற விமர்சனம், சீமான்சல் பகுதி மக்களை அவமதிப்பதாக ஓவைசி குற்றம் சாட்டினார். "இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவது தீவிரவாதம் அல்ல" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
 
மத அடையாளம் மற்றும் அரசியல் சொல்லாடல் குறித்த ஒரு பெரிய விவாதமாக இந்த விமர்சனத்தை ஓவைசி மாற்றியுள்ளார். "தேஜஸ்வி யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் தம்பியாக செயல்படுகிறார். அதனால் தான் அவர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார் என்றும் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!