அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே, பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதானிக்கு எதிராக வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதானி குழுமம், கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இவற்றுக்கு எதிராக பல பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த செய்திகள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, அதானி குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இதன் அடிப்படையிலேயே, இந்தத் தடையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக எந்தவிதமான அவதூறு செய்திகளையும் வெளியிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.